மூட்டை கட்டி பணம் எடுத்துவந்த அண்ணாமலை - போலீசில் புகார் அளித்த காங்கிரஸ் வேட்பாளர்! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தல் பரப்புரைக்கு, ஹெலிகாப்டரில் பண மூட்டையுடன் அண்ணாமலை சென்றதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் விநியோகிப்பதாக காவுப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொரகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வினய்குமார் தெரிவித்ததாவது, "எனக்கு வந்துள்ள தகவலின் படி அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவே அண்ணாமலை எடுத்துவந்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நான் புகார் அளித்துள்ளேன். போலீசார் இடமும் புகார் அளித்திருக்கிறேன்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election 2023 vinaikumar complaint against annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->