சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல்.! பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூருவுக்கு வருகிறார். இதில் பிரதமர் மோடி, பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள நைஸ் ரோடு சந்திப்பில் இருந்து சுங்கதகட்டே வரை திறந்த காரில் ஊர்வலமாக சென்று மக்களிடம் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கயுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை கோலார், ராமநகர், சென்னப்பட்டணா, மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka election PM Modi campaigning in bangalore today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->