உயிர் காக்கும் விவசாயம்! ஆயுள் தண்டனை கைதி விவசாயம் செய்ய 3 மூன்று பரோல் வழங்கிய கர்நாடக ஐகோர்ட்! - Seithipunal
Seithipunal


பொதுவாக, சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், உடல் நலக்குறைவு அல்லது மகன், மகளின் திருமணங்களுக்காக பரோல் கோருவது வழக்கம். அந்த வகையில், கர்நாடக ஐகோர்ட் ஒரு ஆயுள் தண்டனை கைதிக்கு விவசாயம் செய்வதற்காக 3 மாத பரோல் வழங்கியுள்ளது.

ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகா சித்ததேவனவரள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (36) என்பவருக்கு, கடந்த 2014-ம் ஆண்டு, ஒருவரை கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

10 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரா, தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு குறித்து விசாரணை மேற்கொண்ட கர்நாடக ஐகோர்ட், சந்திரா 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே வராததை கருத்தில் கொண்டு, 90 நாட்கள் விவசாயம் செய்ய பரோல் வழங்க உத்தரவிட்டது.

ஆனால், இந்த பரோல் நேரத்தில் அவர் வெறும் விவசாய பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka High Court grants 3 months parole to lifer for agriculture


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->