தாக்குதல் எதிரொலி: கர்நாடாவிற்கு பேருந்து சேவை நிறுத்தம்!
Karnataka Maharashtra bus strike
கர்நாடகத்தில் மகாராஷ்டிர அரசுப் பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, மகாராஷ்டிர அரசு கர்நாடகத்திற்கு செல்லும் அனைத்து பேருந்து சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு, பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா பகுதியில் கன்னட ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்து சேதமடைந்ததுடன், ஓட்டுநரும் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்குப் பதிலளிக்கும்விதமாக, மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர், கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிட்டார். மேலும், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை, பேருந்து இயக்கம் மீண்டும் தொடங்கப்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் முன்னதாக நடந்த மற்றொரு தாக்குதலுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேச முடியாது எனக் கூறிய கர்நாடக அரசுப் பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
English Summary
Karnataka Maharashtra bus strike