கர்நாடக மாநில பட்ஜெட் ; அரசு திட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்த சித்தராமையா; பா.ஜனதா கண்டனம்..!
Karnataka State Budget Siddaramaiah who made reservation for Muslims in government project contracts
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா பேசுகையில், "கா்நாடக பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் பேசுகையில்; தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு இந்த திட்ட பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ரூ.02 கோடி வரையிரான பணிகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், முஸ்லிம்கள் மட்டுமின்றி இட ஒதுக்கீட்டு பட்டியலில் 1ஏ பிரிவில் சமூகங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல அரசு துறைகளுக்கான சரக்குகள் கொள்முதலிலும் தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம் பட்ஜெட் மற்றும் ஹலால் பட்ஜெட் என்று கடுமையாக அக்கட்சி தலைவர்கள் விமா்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka State Budget Siddaramaiah who made reservation for Muslims in government project contracts