கேதர்நாத் : கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து! - Seithipunal
Seithipunal



கேதர்நாத் அருகே கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட தனியார் நிறுவன ஹெலிகாப்டர், கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் அருகே உள்ள மலைப்பகுதியின் இறங்குதளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் அந்த ஹெலிகாப்டர் பழுதுபார்ப்பதற்காக கச்சார் விமான தளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதை தொடர்ந்து,  எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம், பழுதடைந்த ஹெலிகாப்டர் கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்டது. இந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது.

அப்போது ஹெலிகாப்டரை தூக்கிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு நடுவானில் திடீரென அறுந்ததால், பழுதடைந்த ஹெலிகாப்டர் மந்தாகினி நதி அருகே உள்ள லின்சோலியில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kedarnath The heli copter that was carried by a rope crashed and crashed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->