தொடரும் பரபரப்பு: கெரகோடு கிராமத்தில் 144 தடை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் அனுமான் கொடியை ஏற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையில் கெரகோடு கிராமத்திற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கொடி கம்பம் வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்தது. 

இதற்காக நிறுவப்பட்ட 108 அடி கொடிக்கம்பத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தேசியக் கொடிக்கு பதிலாக அனுமான் கொடி ஏற்றப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்து தேசியக் கொடியை அகற்ற வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில் கெரகோடு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அனுமான் கொடி இறக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

இதனை கண்டித்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள இந்து அமைப்புகள், பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerakode village 144 ban 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->