கேரளாவில் அடுத்தடுத்து பரவும் குரங்கு அம்மை.. மேலும் ஒருவருக்கு அறிகுறி.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை கதிகலங்க வைத்து வருகிற குரங்கு அம்மை, நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒரு மலையாளிக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, மங்களுர் விமானநிலையம் வழியாக கண்ணூர் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு சுகாதரத்துறையினர் பரிசோதனை செய்தனர். 

மேலும், அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை தனிமைப்படுத்தி உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala another person affected monkeypox


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->