பறவைக்காய்ச்சல் || 1500 வாத்துகள் திடீர் உயிரிழப்பு.! 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாக இந்தியாவில் கொரோன வைரஸை அடுத்து, அடிக்கடி பறவைக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும்போது பல ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் கோழி முட்டை விற்பனையும் வீழ்ச்சியடைகிறது. இதனால், கோழிப்பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்துள்ளன.

இதையடுத்து, கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலப்புழா மாவட்டத்தில்  வாழுத்தனம் நகராட்சியைக் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவைக்காய்ச்சல் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கு முன்பு கடந்த வாரம் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், தற்போது, 20 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்வதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் ஏழு பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழு கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் போன்ற விசயங்களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக செயல்படும். 

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala bird flu 1500 ducks died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->