கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் வெடித்த குண்டு: உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! அதிர்ந்து போன கேரளா!
Kerala Christian prayer meeting bomb exploded
கேரளா, களமசேரி பகுதியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் 'யெகோவாவின் சாட்சிகள்' என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ஆம் தேதி தொடங்கி கடைசி நாளான நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எர்ணாகுளம், அங்கமாலி, எட்டப்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
காலை 9:45 மணி அளவில் மாநாட்டு மையத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது அரங்கின் மையப் பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்ததில் மொத்த அரங்கமே அதிர்ந்தது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். உயிர்பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளி வெளியே ஓடியதால் அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
அடுத்த சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்ததால் 2 இடங்களிலும் தீ பிடித்து அங்கிருந்த இருக்கைகள் போன்ற பொருட்கள் எரிந்து சேதமாகின.
குண்டுவெடிப்பில் சிக்கியும் தீயில் கருகியும் சிலர் படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். மேலும் சிலரது உடலில் முழுவதும் தீ பற்றி கொண்டதால் அணைக்க முடியாமல் திணறி அவர்களை மீட்பதற்காக பலரும் போராடினர்.
அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சிக்கி லிபினா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 51 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு குழந்தை உள்பட 18 பேர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பல எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Kerala Christian prayer meeting bomb exploded