ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறு விறு! - Seithipunal
Seithipunal


 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.இதையடுத்து  அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி இன்றுதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து அந்த தொகுதியில் போட்டியிட  தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். ஆனால் அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும் தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சாமியானா பந்தல், மின் விளக்குகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவு கோடுகள் போடப்பட்டு உள்ளன. 200 மீட்டர் தொலைவில் வேட்பாளரின் தேர்தல் 'பூத்' அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைக்கப்பட்டு, அவை பூட்டி சீல் வைக்கப்படுகிறது. பின்னர் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode East bypoll Voting begins


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->