உடல் எடை குறைக்க டயட்! உணவுக்குழாய் சுருங்கி மாணவி பலி! மக்களே உஷார்!
Kerala Diet College Girl death
கேரள மாநிலத்தில், உடல் எடை குறைக்க இணையதள ஆலோசனைகளை பின்பற்றிய ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் கூத்துப்பரம்பாவை சேர்ந்த ஸ்ரீநந்தா (18) என்ற மாணவி, அதிகமான உடல் எடை குறித்து கவலையில் இருந்தார். உடல் எடை குறைப்பதற்காக 'யூ-டியூப்' வீடியோக்களை பார்த்த அவர், அதில் உள்ள தவறான உணவுக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி உணவு அளவை குறைத்துள்ளார்.
இதனால் அவரது உடல்நிலை குறுகிய காலத்திலேயே மோசமடைந்தது. உடனே அவரை தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவரது வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.
முறையான சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரது உடல்நிலை மேம்படாமல் மாணவி ஸ்ரீநந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது, ஸ்ரீநந்தா அனோரெக்சியா நெர்வோசா எனும் உணவு கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். உணவு குறைப்பு மற்றும் நீண்ட கால பசியால் அவரது உடலில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்தது. இது உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதித்தது.
சரியான சிகிச்சை பெற்றிருந்தால் இது தவிர்க்கக்கூடிய சம்பவமாக இருந்திருக்கும். இணையத்தில் உள்ள எந்த உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசனைகளையும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பின்பற்றுவது ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
English Summary
Kerala Diet College Girl death