கேரள பட்டாசு வெடி விபத்து!...பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் நீலீஸ்வரம் அருகே அஞ்சூற்றம்பலம் பகுதியில் உள்ள வீரர்காவு கோவிலில் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 28-ம் தேதி நள்ளிரவு சாமுண்டி வேடமணிந்து தெய்யம் ஊர்வலம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, கோவில் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் இருந்து தீப்பொறிகள் வெளியாகி, கோவில் அருகே பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் விழுந்து, பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பீதி அடைந்து, நாலாபுறமும் சிதறி ஓடினர்.

குடோன் அருகே நின்றிருந்த பக்தர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். மேலும் வெடி விபத்தில் கோவில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த 2 பேர் நேற்று இரவு உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala firecracker explosion accident he death toll has risen to 4


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->