ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.. அதிரடி கண்டிஷன் போட்ட கேரள வனத்துறை.! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுகின்ற கயிறு இழுக்கும் போட்டியில் வளர்ப்பு யானைகளை பயன்படுத்தக் கூடாது என்று கேரளா வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசுகின்ற தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். இது பத்து நாட்கள் வண்ண பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகை. 

அந்த வகையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓனம் பண்டிகையில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள நிறைய மக்கள் செல்லும் காரணத்தால் அதற்கு ஏற்றவாறு அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. 

இத்தகைய நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுகின்ற கயிறு இழுக்கும் போட்டியில் வளர்ப்பு யானைகளை பயன்படுத்தக் கூடாது என்று கேரளா வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி எவரேனும் தடையை மீறி கயிறு இழுக்க யானைகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala forest department condition to onam 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->