நீட் தேர்வு ரத்து: கைவிரித்த CM ஸ்டாலின்! திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது - எடப்பாடி பழனிசாமி!
DMK MKStalin NEET ADMK EPS
சென்னை அதிமுக தலைவர் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, "நீட் தேர்வு விவகாரத்தில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கைவிர்த்து உள்ளார்.
மத்திய அரசுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தற்போது தெரிவிக்கிறார். 2021 தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இந்த அரசு ஏமாற்றி உள்ளது.
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கை 20 சதவீத அறிவிப்புகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுகவின் 565 தேர்தல் வாக்குறுதிகளில் நீட் உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு அரசு தான் முதலிடத்தில் உள்ளது. இப்படியே கடன் வாங்கிக் கொண்டு சென்றால் இந்த கடனை யார் அடைப்பது" என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி உள்ளார்.
English Summary
DMK MKStalin NEET ADMK EPS