அதிமுக தலைமையகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே விநியோகம்.! - Seithipunal
Seithipunal


இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த இபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். 

மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்று திமுக ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதன் பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி, பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார்.

அதாவது, "அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்" என்ற பெயரில் பெப்பர் ஸ்பிரே மற்றும் எஸ்ஓஎஸ் உபகரணமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pepper spray provide to womens in admk head office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->