ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி..!
Erode East by election VC Chandrakumar contesting on behalf of DMK
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 05ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான
சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார். இவர்,ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதன் பின்னர் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரகுமார் தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்டார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவிடம்தோல்வியடைந்தார்.
பின்னர் இந்த தொகுதியில் 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா.வும், பின்னர் 2023 -ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் (தி.மு.க. கூட்டணி) வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Erode East by election VC Chandrakumar contesting on behalf of DMK