சபரிமலையில் பக்தர்களுக்கு ஐந்து புதிய திட்டம் - கேரள அரசு உத்தரவு.!
kerala govt order for five new facility in sabarimala temple
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெறும்.
அந்தவகையில், இந்த வருடத்திற்கான மகர விளக்கு பூஜைக்காகசபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது.
அதனால், தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடை திறக்கப்பட்டது முதல் நேற்று வரை சுமார் 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்தாண்டில் இருந்து பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை கோவிளுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஐந்து புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்படவுள்ளது.
மேலும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட ஐந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
English Summary
kerala govt order for five new facility in sabarimala temple