மொத்தம் ரூ.2000 கோடி, 271 ஏக்கர் நிலம், 124 கிலோ தங்கம் - குருவாயூர் கோயில்!
Kerala guruvayur Kovil gold money silver value
கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் வைப்பு தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் வைப்புத்தொகை ரூ 2 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாகவும், ஐயப்பன் கோவிலின் வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசிப்பது வழக்கம்.
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தி வரும் நிலையில், இந்த கோவிலுக்கு வைப்புத்தொகை மற்றும் நிலம் எவ்வளவு இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதன்படி, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் மற்றும் ரூபாய் 2,053 கோடி வைப்புத் தொகை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் 124 கிலோ தங்கம், 6,073 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கங்களை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
இந்த கோவிலின் வைப்புத்தொகை ரூ.2,053-கோடியில் கேரள வங்கியில் உள்ள ரூ.176 கோடியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் நிலங்களின் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போன்று, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வைப்புத்தொகை ரூ.41.74 லட்சமும், தங்கம் 227.82 கிலோவும், வெள்ளி 2,994 கிலோவும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் வைப்புத்தொகை ரூ 2 ஆயிரம் கோடியை எட்டியிருக்கும் நிலையில், ஐயப்பன் கோவிலின் வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala guruvayur Kovil gold money silver value