விஸ்மயா மரண வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
Kerala High court Judgement about vismaya Case
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான விஸ்மயா நாயர் என்ற பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வரதட்சணை கொடுமையின் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அவருடைய மரணம் பற்றிய விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்தன விஸ்மையாவை அவருடைய கணவர் வரதட்சணை கொடுமை செய்ததாக இருந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தனக்கு காயம் ஏற்பட்ட புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
எனவே, விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாற்றி வந்தனர். இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கணவர் கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 12 1/2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட விஸ்மயாவின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி கிரன்குமார் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இதை விசாரித்த நீதிபதிகள் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று மறுத்துள்ளனர்.
English Summary
Kerala High court Judgement about vismaya Case