காணொளி மூலம் திருமணம் செய்துகொள்ள கேரள உயர்நீதிமன்றம் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


காணொளி மூலம் திருமணம் செய்துகொள்ள கேரள உயர்நீதிமன்றம் அனுமதி.!!

கடந்த 2021-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்துக்கொள்ள மனு அளித்துள்ளேன். 

ஆனால், தன் காதலன் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் இருந்து உடனடியாக சொந்த ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுக்களை கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரணை செய்தது.

அப்போது, அவர்கள், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகளின் உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court permission to vedio call marriage in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->