கேரளா : மனைவிகளை மாற்றும் விவகாரத்தில் திடீர் திருப்பம்.! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


கேரளா: கடந்த சில தினங்களுக்கு முன் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் அளித்த புகார் நாடு முழுவதும் பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது.

அவரின் அந்த புகாரில், கணவர் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தன்னை வற்புறுத்துவதாகவும், மறுத்தால் கொடுமை படுத்தி, குழந்தையை கொன்று விடுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தபெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பெரும் அதிர்ச்சி காது இருந்தது. ஆம், கேரளாவில் சமூக வலைதளம் மூலமாக, கணவன்மார்கள் தங்களின் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் குழு அமைத்து செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்பதும், இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிவரவே, இந்த விவகாரம் பூதாகாரமானது. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விபரங்களையும், இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய போலீசார் களமிறங்கினர்.

இந்த நிலையில், இந்த குழுவில் இடம்பெற்ற முக்கிய பிரமுகர்கள் பலரும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலும் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை தற்போது மட்டுப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் போலீசார் தரப்பில் இந்த விசாரணை குறித்து தெரிவிப்படுவது என்னவென்றால், 

"குழுக்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாருமே புகார் கொடுக்க முன்வருவதில்லை. இதன் காரணமாகத்தான் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இதில், பாதிக்கப்பட்ட பெண்களை நாங்கள் நேரடியாக அணுகி, 'உங்களின் தகவல்களை ரகசியமாக நாங்கள் வைத்துக் கொள்கிறோம், நீங்கள் புகார் மட்டும் கொடுங்கள்' என்று தெரிவித்தோம்.

ஆனால் எந்த ஒரு பெண்ணும் தைரியமாக வந்து புகார் கொடுக்க முன்வரவில்லை. பெண்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை கண்டிப்பாக கைது செய்வோம்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala wife exchange case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->