மதுபோதையில் பெண் மீது காரை மோதிய சட்டக்கல்லூரி மாணவன் - நொடியில் நேர்ந்த கொடூரம்.!
law college student arrested for accident in up
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் ரக்ஷித் சவுரசியா. இவர் குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். இவருடைய நண்பர், பிரன்சு சவுகான் வஹொடியா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் கல்வி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் பிரன்சு சவுகான் தோழி ரக்ஷித் சவுரசியாவுடன் மது அருந்திவிட்டு தனது தந்தையின் காரில் சென்றுள்ளனர். காரை ரக்ஷித் சவுரசியா ஓட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் மீதும், சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ரக்ஷித் சவுரசியா, காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். உடனே அங்கிருந்த நபர்கள் சவுரசியாவை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ரக்ஷித் சவுரசியாவை கைது செய்தனர். மதுபோதையில் காரை ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவன் ரக்ஷித் சவுரசியா பைக்கில் சென்ற பெண் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
law college student arrested for accident in up