தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்.. அசத்திய மணமகள் வீட்டார்..!! குஷியான விருந்தாளிகள்.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகள் வீட்டிற்கு செல்லும் பொழுது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவற்றை கொடுப்பது வழக்கம். ஆனால் சென்னையைச் சேர்ந்த நிர்மல் என்பவர் மற்றும் புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த ஆர்த்தி என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக மணமகள் வீட்டார் சார்பில் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் குவாட்டர் சரக்கு பாட்டில் வழங்கியுள்ளனர். இதனால் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor provided to the wedding guests


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->