தலைவணங்குகிறேன் - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி டிவிட்! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இரவு 8 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாஜக 240 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

மேலும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 50 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 134 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இந்த தேர்தலை பொருத்தவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. 

அதே சமயத்தில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தல் கட்சிகளை தங்களது கூட்டணிக்கு இணைத்து, மத்தியில் ஆட்சி பிடிப்பதற்கு உண்டான பணிகளை காங்கிரஸ் கட்சியும் மும்பரமாக முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "நம் இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி மீது நம்பிக்கை வைத்து, இந்திய வரலாற்றில் ஒரு வரலாற்று சாதனை வெற்றியை கொடுத்துள்ளனர். 

இந்த பாசத்திற்காக நான் மக்களுக்கு தன்னை தலை வணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளை தொடர்ந்து செய்வோம் என்று உறுதி அளிக்கிறேன். 

மேலும் இந்த வெற்றிக்காக உழைத்த கட்சிகளின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நான்  தலைவணங்குகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Election 2024 Result PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->