மதுரை எய்ம்ஸ் : 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?...ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி உள்ளிட்டவை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும், மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க கோரி பாஸ்கர் என்பவர் உயர்நிதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று  விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்றும், எப்போது கட்டி முடிப்பீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த பேசிய மத்திய அரசு, கொரோனா தொற்றால்ருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், 2026க்குள் பணி முடிந்துவிடும்' என்று தெரிவித்தது. கொரோனாவை  காரணம் காட்டாதீர்கள் என்று சாடிய நீதிபதிகள், கட்டுமானப்பணி எப்போது நிறைவடையும் என்று  மத்திய சுகாதரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIIMS What have you done for 5 years High Court branch questions central government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->