இன்று முதல் மதுரை - போடிக்கு ரெயில் சேவை ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


இன்று முதல் மதுரை - போடிக்கு ரெயில் சேவை ஆரம்பம்.!

மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 27-ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரயில் இன்று முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இதற்காக ஓஎம்எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் போடிக்கு ரயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரயில் காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப் போடியை வந்தடைகிறது.

மீண்டும் மாலை 5.50-க்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட கிழமைகளில் போடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

இதைத்தொடர்ந்து போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு உள்ளிட்டக் கிழமைகளில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. இந்த ரயில் இயக்கத்துக்கான தொடக்க விழா போடி ரயில்நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தத் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai to podi train service start from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->