மகா கும்பமேளா.. 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
Maha Kumbh Mela 9.24 crore devotees take holy dip
இதுவரை சுமார் 9.24 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 43.18 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அடுத்த மாதம் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு செய்துள்ளது.உலகின் பல்வேறு நாடுகளிருந்து ஏராளமான பகதர்கள் வருகைதந்து கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடி செல்கின்றனர்.
இதுவரை சுமார் 9.24 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 43.18 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது உத்தர பிரதேச அரசு. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்த வருடம் மகா கும்பமேளாவுக்கு சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Maha Kumbh Mela 9.24 crore devotees take holy dip