மஹாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்-தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று பதவி விலகினார். இதையடுத்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சர் பதவியேற்பார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஏக்னாத் ஷிண்டே இன்று மஹாஷ்டிரா ஆளுநரை சந்தித்தார். 

இந்த சந்திப்புக்குபிறகு தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; 'பால் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. 2019-ல் பாஜக ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். சிவசேனாவை சேர்ந்த ஒருவர்தான் முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். ஏக்னாத் ஷிண்டே மந்திரி சபையில் பாஜக இடம் பெறும். நான் அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன். ஆனால், அரசுக்கு எனது ஆதரவு இருக்கும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra CM Announcement Devendra Fadnavis


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->