500 கிலோ வெங்காயம் விற்று 2 ரூபாய் லாபம்! கத்தி கதறி அழுத விவசாயி!
Maharashtra Onion one kg one rupee
500 கிலோ வெங்காயம் விற்று 2 ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்தால் விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள காரணத்தினால், விலை கடுமையாக சரிந்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை கொடுத்துள்ளது.
சோலாப்பூர் அடுத்த பார்ஷி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான், தனது நிலத்தில் விளைந்த சுமார் 500 கிலோ வெங்காயத்தை, வேளாண் விளைபொருள் விற்பனை கூடத்திற்கு விற்பனை செய்ய இன்று எடுத்து வந்துள்ளார்.
வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற கணக்கில், சுமார் 512 கிலோ வெங்காயத்திற்கு 512 ரூபாய் 49 பைசா அவருக்கு கிடைத்துள்ளது.
அதிலும், லாரி வாடகை, சுமை கூலியாக 510 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, மீதம் இரண்டு ரூபாய்க்கான காசோலையை விவசாயி ராஜேந்திர துக்காராமிடம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாடும் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maharashtra Onion one kg one rupee