துணை முதலமைச்சரானார் அஜித் பவார்! தேசியவாத காங்கிரஸ் உடைந்தது!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஒரு அரசியல் திருப்பம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே சிவசேனா கட்சியின் குடும்ப வாரிசு அரசியல் காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் குடும்ப வாரிசு அரசியல் காரணமாக பிளவுப்பட்டுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவர், அவரின் மகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், வாரிசு அரசியலை முன்னெடுப்பதாகவும் அஜித் பவார் மற்றும் அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும், ஆளும் ஏக் நாத் ஷிண்டே - பாஜக கூட்டணியில் இணைந்து மாநில அமைச்சரவையில் அஜித் பவர் அணியினர் பங்கு பெற உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது சரத் பவார், கட்சியின் தலைமை தலைவர் பதவியை விட்டு விலகுவதாக கூறி, மீண்டும் கட்சியை ஒன்றிணைத்தார்.

இந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவர் மற்றும் அவரின் ஆதரவு எம் எல் ஏக்கள் 28 பேர் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். 

மேலும் மாநில அமைச்சரவையில் பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று மாலை பதவி ஏற்று கொண்டார். மேலும், தங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும் அஜித் பவார் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Politics NCP Ajit Pawar support to Maharashtra govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->