தாக்ரே பட்டத்தை திருட முடியாது! ஆட்சி இழந்து, கட்சியை இழந்தும் நான் தான் வாரிசு என்ற உத்தவ் தாக்ரே! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர ஆளுங்கட்சியாக இருந்த சிவேசானாவில் குடும்ப, வாரிசு அரசியல் காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. இதில், 41 எம்எல்ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணையவே, அவருக்கு பாஜக ஆதரவு கரம் நீட்டி ஆட்சியையும் அமைத்தது. 

சிவேசானா கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி 'தாங்கள் தான் உண்மையான சிவசேனா' என்று அங்கீகரிக்கவும், அக்கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார்.

இரு தினங்களுக்கு முன், “சிவசேனா” என்ற கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான “வில் அம்பு”வையும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தக்க வைத்துக் கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், ""தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

என்னிடமிருந்து கட்சியின் பெயரும், சின்னமும் திருடப்பட்டுவிட்டது. ஆனால் 'தாக்கரே' என்ற பெயரை திருட முடியாது" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Politics Election Commission Shiv Sena Bow and Arrow Eknath Shinde faction


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->