மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இதய தமனிகளில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

அதாவது, இன்று காலை, "உத்தவ் தாக்கரே, சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர் நன்றாக இருக்கிறார். 

மேலும் அவர் பணியாற்றவும் மக்களுக்கு சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra ex cm uttav thakare admitted hospital for health issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->