நீட் தேர்வில் பணம் கொடு; பேப்பர் எடு; விளையாட்டு - மல்லிகார்ஜுனே கார்கே அதிரடி.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு தேர்வுகள் முகமை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வெறும் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை கிடையாது. தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே பரஸ்பர உறவு உருவாகி, ‘பணம் கொடு, பேப்பர் எடு’ என்ற விளையாட்டு நடந்து வருகிறது.  

நீட் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. ஆவணங்கள் கசிந்துள்ளன. ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு,  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mallikarjune karke speech about neet exam malpractice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->