ஏன் லேட்டா எழுப்புன? ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொன்ற மகன்.!
man arrested for kill father in kerala
ஏன் லேட்டா எழுப்புன? ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொன்ற மகன்.!
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாய். இவர் மகன் ரிஜோ. இவர் அதேபகுதியில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலை ரிஜோ நேற்று மாலை மது அருந்தவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ரிஜோ தன்னை காலை 8 மணிக்கு எழுப்பி விடுமாறு தந்தையிடம் கூறிவிட்டுப் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் மகன் கூறியதை மறந்த தந்தை ரிஜுவை காலை 8.15 மணிக்கு எழுப்பியுள்ளார்.
அதன் பின்னர் எழுந்த ரிஜோ உன்னை எட்டு மணிக்கு தானே எழுப்பச் சொன்னேன் ஏன் இவ்வளவு தாமதமாக எழுப்பி உள்ளாய்? என்றுத் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். சிறிது நேரத்தில் இந்த தகராறு பெரிதாகி உள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ரிஜோ, தன் தந்தையை இரும்பு கம்பியால் பலமாக தலையில் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து ரிஜோவை கைது செய்தனர். சற்று தாமதமாக எழுப்பியதற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
man arrested for kill father in kerala