பணம் கொடுக்க மறுத்த தாய்.! கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்ற கொடூர மகன்.!
man arrested for kill mother in bihar
பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு. இவர் தனது தாய் பிரதிமா தேவியுடன் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஹிமான்ஷு தனது தாயை கொன்று, அவரது சடலத்தை ஒரு சூட்கேசில் வைத்து பிரயாக்ராஜுக்கு ரெயிலில் வந்துள்ளார்.
இதையடுத்து அந்த உடலை திரிவேணி சங்கமத்தில் வீச முடிவு செய்து வந்துள்ளார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். அந்த ஒரு பெண்ணின் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், ஹிமான்ஷு கடந்த 13-ந்தேதி, தனது தாயிடம் ரூ.5 ஆயிரம் கேட்டதாகவும் பணம் தர அவரது தாய் மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill mother in bihar