ஜெர்மன் பெண்ணுக்கு பேருந்தில் பாலியல் தொல்லை அளித்த புதுச்சேரி வாலிபர் கைது.!
man arrested for sexuall harassment to german woman in puthuchery
ஜெர்மன் பெண்ணுக்கு பேருந்தில் பாலியல் தொல்லை அளித்த புதுச்சேரி வாலிபர் கைது.!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோணமங்கலம் என்ற கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார். இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்தில் ஏறினார்.
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென ஜெர்மன் நாட்டு பெண்ணின் படுக்கைக்கு அருகில் காலியாக இருந்த படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார். அப்போது அவர் திடீரென அந்த இளம்பெண்ணை கட்டியணைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்து நடுவழியில் இறக்கி விட்டனர். இதையடுத்து அந்த பேருந்து பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் அந்த இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில், வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man arrested for sexuall harassment to german woman in puthuchery