3 மாதக் குழந்தையை தரையில் வீசிய கொடூரத் தந்தை - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


3 மாதக் குழந்தையை தரையில் வீசிய கொடூரத் தந்தை - போலீசார் தீவிர விசாரணை.!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் கன்னியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குமாரபுரம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசியுள்ளார்.

இதில் அந்தக் குழந்தை வலித் தாங்கமுடியாமல் பயங்கரமாக அலறியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கீழே வீசப்பட்டதில் காயமடைந்து வலித் தாங்கமுடியாமல் கதறி அழுத்த கைக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for throw three month baby in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->