இரும்பு கம்பியால் பக்தர்களைத் தாக்கிய மர்மநபர் - பொற்கோயிலில் பரபரப்பு.!
man attack devotees in punjab gold temple
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த நேற்று முதல் தொடங்கி நாளைய தினம் மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொற்கோயிலின் உள்ளே கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்ற போதும், அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார்.
இதையடுத்து பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அந்த நபர் தாக்கினார். தொடர்ந்து பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதலில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். அவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
man attack devotees in punjab gold temple