மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றாரா? காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


குடும்பத்தினரை மதம் மாற்றிவிட்டதாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் தீசா தாலுகா மல்ஹடா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் சோலங்கி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சோலங்கியின் மகள் கல்லூரியில் படித்து வந்த நிலையில், அதே கல்லூரியில் படித்து வந்த  அஜூஸ் ஷேக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு சொளங்கி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரது குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அஜூஸும் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இஸ்லாமிய முறைப்படி வழிப்பாடு செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரடு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சோலங்கி எதிர்ப்பு தெரிவித்ததால், சோலங்கியின் மனைவி பிள்ளைகள் வீட்டில் இருந்து வெளியேறி அஜூஸின் குடும்பத்தினர் ஆதரவுடன் இஸ்லாமாக மதம் மாறி வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், மனைவி, மகள், மகனை தன்னிடம் ஒப்படைத்துவிடும்படி அஜூஸ் ஷேக்கின் குடும்பத்திடம் சோலங்கி முறையிட்டுள்ளார்.

அவர்களை அழைத்து வர வேண்டும் எனில் 25லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் மேலும், மதம் மாற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட கடிதத்தில் அஜூஸ் ஷேக்கின் குடும்பத்தினர் தான் காரணம் என எழுதியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man attempt suicide in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->