பேரக்குழந்தையை பார்க்க வந்த தாத்தாவுக்கு வழியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பேரக்குழந்தையை பார்க்க வந்த தாத்தாவுக்கு வழியில் நடந்த கொடூரம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. 

இந்த செய்தியை கேட்டு ஆனந்தம் அடைந்த அப்துல் ரஹ்மான் தனது பேரக் குழந்தையைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அதன் படி அவர் நேற்று மாலை மருத்துவமனையில் குழந்தையைப் பார்த்துவிட்டு தன்இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி சென்றுள்ளார். 

அப்போது பின்னால் வேகமாக வந்த டெம்போ ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அந்த நேரத்தில் டெம்போ எதிர்பாராதவிதமாக அப்துல் ரஹ்மான் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அப்துல் ரஹ்மானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேரக் குழந்தை பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for bike accident in nagarkovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->