காட்டு யானைத் தாக்கி ஒருவர் பலி - கேரளாவில் பயங்கரம்.!
man died for elephant attack in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பெருமளவில் சேதங்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர்.
அந்த வகையில், பத்தனம்திட்டா மாவட்டம் துலாப்பள்ளியில் உள்ள வனப்பகுதி அருகே பிஜு என்பவர் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து யானையை விரட்டியபோது, யானை அவரை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்து கொன்றுள்ளது. இதனால், கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பிஜுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மனித-விலங்கு மோதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பிஜுவின் குடும்பத்தினரை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு விரைவில் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
English Summary
man died for elephant attack in kerala