தேனியில் செல்போனை திருப்பிக் கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.!  - Seithipunal
Seithipunal


தேனியில் செல்போனை திருப்பிக் கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.! 

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி. ஐவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா என்பவரும் நண்பர்கள்.

இதில் ஒண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜா செல்போனை வாங்கி சென்றார். அதன்பின்னர் அவர் செல்போனைக் கொடுக்கவில்லை. யுவராஜாவும் செல்போனை பலமுறை திருப்பி கேட்டார். 

ஆனால் அவர் செல்போனை தர மறுத்துள்ளார். இதையடுத்து யுவராஜா ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு தனது நண்பரான வினோத் குமார் என்பவரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். 

இதையறிந்த யுவராஜா தனது செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்து கொண்டுச் சென்றுள்ளார். அங்கு செல்போன் வாங்கியது தொடர்பாக இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால், வினோத்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே யுவராஜா வினோத்குமாரை மீட்டு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுச் சென்றார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வினோத்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே  வினோத் குமார் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill for ask retun celphone in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->