காத்துவாக்குல இரண்டு காதல் - கல்யாணம்; மாப்பிள்ளை ஒன்று, மணப்பெண்கள் இரண்டு..! தெலுங்கானா மாப்பிள்ளைக்கு அதிர்ஷ்டம்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவர், இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் லிங்காபூர் மண்டலை சேர்ந்தவர் சூர்யாதேவ், இவர் ஐதராபாத்தில் சினிமாதுறையில் பணி செய்து வருகிறார். இவருக்கும் செட்டிஹத்பனுார் ராஜூலகுடா, சிர்பூர் மண்டலை சேர்ந்த கனகா லால் என்பவரும் 03 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அதே நேரத்தில், புல்லாரா என்ற கிராமத்தை சேர்ந்த ஜல்கர் தேவியையும் காதலித்து வந்துள்ளார். இந்த இரு பெண்கள் வீட்டிலும் காதல் விபரம் தெரியவர, விஷயம் பஞ்சாயத்து வரை சென்றது. பஞ்சாயத்து பெரியவர்கள் தலையிட்டு பேசியதில், சூர்யா தேவ் இருவரையும் விரும்புவதாக கூறியுள்ளார். திருமணம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. பெண் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்படாததால் போலீசார் இதில் தலையிட வில்லை.

இந்த திருமணம் இரு பெண்கள் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குமரம்பீம் ஆஷிபாபாத் மாவட்டம் ஜக்தியால் மாவட்டத்தில் கிராம பெரியோர் முன்னிலையில் இரு மணமகள்களும் மாப்பிள்ளையுடன் ஒரே மேடையில் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த திருமணம் ஹிந்து சம்பிரதாயப்படி நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரு மணப்பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு மற்றும் பொறுப்பை உறுதியளிக்கும் பத்திரத்தில் மாப்பிள்ளை சூர்யா தேவ் கையெழுத்திட்டார். இந்த திருமண விழாவில் மூன்று கிராமங்களிலிருந்தும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம், #TwoBridesOneGroom என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man marries two women at same time in Telangana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->