என் தூக்கமே போச்சு சார்.. 3 மணிக்கே கூவுது - சேவல் மீது புகார் அளித்த வாலிபர்.!
man petition against neighbour rooster in kerala
பக்கத்து வீட்டுக்காரரின் சேவல் கூவியதால் தனது தூக்கம் கெட்டுப்போவதாக கூறி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டம் பல்லிக்கல் பகுதியை சேர்ந்தவர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், வீட்டிலிருந்தே ஒய்வு எடுத்து வரும் இவரின் பக்கத்து வீட்டுக்காரரான குமார் என்பவரின் சேவல் தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் பிரச்சனைக்குக் காரணம் சேவல்தான் என்று கருதி, விசாரணையைத் தொடங்கினார். இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க குருப் மற்றும் குமார் இருவரும் அழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்ததில் பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டின் மேல் தளத்தில் சேவல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் இந்த சர்ச்சையைத் தீர்க்க, கோழி கொட்டகையை மேல் தளத்திலிருந்து நிலத்தின் தெற்குப் பகுதிக்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார்.
English Summary
man petition against neighbour rooster in kerala