கர்நாடகா : அரசு பேருந்தில் பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசு பேருந்தில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று விஜயாப்புராவில் இருந்து தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.

அந்த பேருந்தில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அதே பேருந்தில் இந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையின் மேல் இருக்கையில் வாலிபர் ஒருவர் பயணம் செய்துள்ளார். 

இதையடுத்து, இந்த பேருந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே உள்ள இரேசூர் கிராமத்தில் மதிய உணவுக்காக சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் கீழே இறங்கின் உணவு சாப்பிட சென்றுள்ளனர்.

ஆனால், மேல் இருக்கையில் இருந்த வாலிபர் மட்டும் கீழே இறங்கவில்லை. தொடர்ந்து, அந்த இளம்பெண் சிறிது நேரத்தில் தனது இருக்கைக்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, மேல் இருக்கையில் அதிக போதையில் கீழே இறங்க முடியாமல் திணறிய வாலிபர் தனது இருக்கையில் இருந்தபடியே சிறுநீர் கழித்துள்ளார். இதனால், கீழ் இருக்கையும் நனைந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த வாலிபர் போதையில் இருந்ததால் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் பேருந்து ஓட்டுனரிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஓட்டுநர் அதே இடத்தில் அந்த வாலிபரை கீழே இறக்கி விட்டுள்ளார்.

மேலும், அந்த இளம்பெண்ணுக்கு மாற்று இருக்கையும் ஒதுக்கி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man urinated on female seat in karnataga bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->