தாய் மொழியோடு இந்தியையும் கட்டாயம் படிக்க வேண்டும்.. அமைச்சர் ரோஜா.! - Seithipunal
Seithipunal


தாய் மொழியோடு இந்தியையும் கட்டாயம் படிக்க வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

நேற்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நடிகை ரோஜா அதன் பின் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாய் மொழியோடு ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் தேவை என்றும் அனைத்து மொழிகளையும் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் பலருக்கும் இந்தி மட்டுமே தெரியும் என்பதால் நமது மாநிலத்திற்கு தேவையானதை பெற்றுக் கொள்வதற்கு இந்தி கட்டாயம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் இந்தியை மக்களிடம் திணிக்கக் கூடாது என்றும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandatory study of Hindi along with mother tongue Minister Roja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->