மணிப்பூர் | சட்டவிரோதமாக குடியேறிய 5 ஆயிரம் பேர்! வெளியான அதிர்ச்சி தகவல்.!
Manipur 5 thousand illegal immigrants
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர், மியான்மர் நாட்டை ஒட்டி இருப்பதால் அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்தநிலையில் முதல் மந்திரி பிரேன்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 5557 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் 5173 பேர் பயோமெட்ரிக் தரவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பயோமெட்ரிக் தரவுகளும் பெறப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எங்களது அரசு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. மிகவும் உணர்வு பூர்வமாக நிலைமையை கையாண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Manipur 5 thousand illegal immigrants