#BigBreaking:: கட்டுக்கடங்காத கலவரக்காரர்கள்.. கண்டவுடன் சுடுங்க..!! மணிப்பூர் ஆளுநர் அதிரடி உத்தரவு..!!
Manipur Governor orders to encounter rioters
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின, பழங்குடி அல்லாத சமூகத்தினர் வாழ்ந்த வருகின்றனர். அந்த மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
இதற்கு எதிராக மெய்டீஸ் சமூகத்தினரும் போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறை சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது.
வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் அதிகரித்து வருவதால் ராணுவத்தால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு மணிப்பூர் மாநில உள்துறை செயலாளர் ரஞ்சித் சிங் ஒப்புதலோடு என்கவுண்டர் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Manipur Governor orders to encounter rioters