மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: சிஆர்பிஎஃப் வீரர் பலி, இரு போலீசார் நிலை என்ன?!
manipur gun fire crpf one death
மணிப்பூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரால் வன்முறை மட்டும் கலவரம் நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என்பதால், அம்ம மாநிலம் பதட்டமான சூழ்நிலையிலேயே இருந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மாநில முழுவதும் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் கலவரம் நடக்காத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில், இன்று மாநில போலீசாரும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அசாம் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியில் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.
இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் வாகனங்களில் இருந்த இரண்டு போலீசார் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், கிளர்ச்சியாளர்கள் காடுகள் வழியாக தப்பி ஓடி பதுங்கி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
manipur gun fire crpf one death